உலகின் ஆகப்பெரும் துயர்களில் முதன்மையானது நாடற்றவர்களாக, அகதிகளாக இன்னொரு நாட்டைத் தஞ்சமடைவதுதான். உலகெங்கும் கிட்டத்தட்ட மூன்று கோடிப் பேர் அகதிகளாக இருக்கின்றனர். ஐ.நா.வால் அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்ட, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையரகம், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்காக, அகதிகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக பயிற்சிப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
தி.நகர், கிராண்ட் ஹோட்ட லில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில் யு.என்.ஹெச்.சி.ஆர். அமைப்பின் இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கான தலைவர் ஆஸ்கார் முண்டியா தலைமை யுரை ஆற்றினார். மூத்த பத்திரி கையாளர் ராதாகிருஷ்ணன், "உண்மையில் அகதிகள் பிரச் சனை என்று எதுவும் கிடையாது. அரசியல் பிரச்சினைதான் இருக்கிறது. அகதிகளைப் பற்றிய செய்திகளைப் பதிவிடும்போது நம் முதல் நோக்கம், அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதுபோல் செய்தி களைப் பதிவுசெய்யக்கூடாது..
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/refugess.jpg)
அகதிகளைப் பற்றி ஊடகத் தவர்களுக்கு புரிதல் முக்கியம். அதற்கு பிரச்சினையின் பின்னணி குறித்த புரிதல், அலசுதல் அவசியம்'' என்றார்.
அடுத்துப் பேசிய நக்கீரன் பொறுப்பாசிரியரும், தமிழக அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினரு மான கோவி.லெனின், ஈழத்தமிழர் கள் நான்கு கட்டங்களாக தமிழகத் துக்கு வந்ததையும், ஒவ்வொரு கட்டத்திலும் தமிழகம் வந்த ஈழத் தமிழர்கள் எண்ணிக்கையை யும் குறிப்பிட்டுப் பேசினார். இவர் களுக்காக புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு என்னென்ன திட் டங்களைச் செயற்படுத்துகிறது என்பதை விரிவாக எடுத்துரைத் தார். அகதிகள் முகாம் என்ற சொற்பிரயோகம், அவர்களைப் பாதிக்கிறது என்பதால் முகாம்கள், மறுவாழ்வு முகாம்கள் என பெயர்மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
சென்னையிலுள்ள யு.என். ஹெச்.சி.ஆர். கள அலுவலக தலைமைப் பணியாளர் சச்சி தானந்த வளன் மைக்கேல், அகதிகள், நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள், நாடற்ற வர்கள், நாடுதிரும்பியோர் குறித்த வித்தியாசங்களையும் மனதில் பதியும்படி விவரித்தார் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தற்காலிகமாக ஏற்படுத்தப் பட்ட அகதிகளுக்கான அமைப்பு, அதன் தேவை நீடித்ததால், தனி அமைப்பாக இது உருவாக்கப் பட்டதையும், 137 நாடுகளில் 18,881 பணியாளர்களுடன் திகழும் இவ்வமைப்பின் இலக்கையும் விவரித்துப் பேசினார்.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்புக்கான, இந்திய தலைமை தொடர்புறுத்துநர் பர்வீந்தர் சிங் ஆன்லைனில் தன் குரல் மற்றும் புள்ளிவிவர காணொலி மூலம், 2022-ல் உலக அளவில் உலகம் உணவு தொடர்பாக எதிர்கொள்ளவிருக்கும் சவால்களையும், உணவே அமைதிக்கான பாதையாக விளங்குவதையும் விளக்கினார். மொத்தத்தில் அகதிகள் குறித்த பார்வையை விசாலப்படுத்துவதாக அமைந்திருந்தது பயிற்சிப் பட்டறை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/refugess-t.jpg)